கோவிட் தொற்று பரவினாலும் பாடசாலைகள் மீள மூடப்படாது.
![]() |
| #SchoolNewsUpdate |
நாட்டில் கோவிட் தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில், பாடசாலைகள் தொடர்ந்து நடத்தப்படுமா என்பது குறித்து கல்வி அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
கோவிட் தொற்று பரவினாலும் பாடசாலைகள் மீள மூடப்படாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவரொருவர் கோவிட் தொற்றுக்கு உள்ளானால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திவிட்டு, கற்பித்தல் செயற்பாடுகளை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
மேலும், பாடசாலை நடத்தும் விதம் தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய வழிகாட்டல்கள் எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் தொடர்பான அறிவித்தல்
இதேவேளை, இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ளதுடன், உயர்தரப் பரீட்சை நவம்பர் 28ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒகஸ்ட் 15 ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என்றும், இந்த வருடத்திற்கான சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் 2 ஆம் திகதிக்குப் பின்னர் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Comments